தி.மு.க. அமைச்சரைப் பாராட்டிய பா.ஜ.க. நிர்வாகி!

தி.மு.க. அமைச்சரைப் பாராட்டிய பா.ஜ.க. நிர்வாகி!
Published on

அமைச்சர் முத்துசாமிக்குதமிழக பா.ஜ.க. விவசாயி அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். 

காரணத்தைக் கூறி நாகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “1000 ஆண்டுகளுக்கு முன்பே நதிநீர் இணைப்புக்கு முன்னோடியாக காலிங்கராயர் வாய்க்கால் வெட்டி 50,000 ஏக்கர் பாசனம் பெற நதிநீர் இணைப்பின் முன்னோடி காலிங்கராயr. அவருக்கு அவர் பிறந்த மண் ஈரோடு, வெள்ளோட்டில் வெண்கலச்சிலை அமைத்த அமைச்சர் முத்துசாமிக்கும், அதைத் திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டுகள்.” என்று நாகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com