தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.பி.கள் 1.5 கோடி- வீரமணி நெகிழ்ச்சி!

Actor Vijay at Periyar thidal
பெரியார்
Published on

திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் பெரியார் உலகம் எனும் புதிய வளாகம் ஒன்று திராவிடர் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பெரியாரைப் பற்றிய முக்கியமான ஆவண சாட்சியமாக இது இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதற்கான கட்டுமானப் பணிகள் விறுவிறுவென மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பல்வேறு நாடுகளிலும் உள்ள பெரியாரிய ஆர்வலர்கள் இதற்காக நன்கொடை அளித்து ஆதரவளித்து வருகின்றனர். 

அதன் ஒரு அங்கமாக, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத மொத்த சம்பளம் 1.5 கோடி ரூபாயை பெரியார் உலகம் அமைக்க நன்கொடையாக அளிக்கப்படுகிறது. 

அதற்கு தி.க. தலைவர் கி.வீரமணி இன்று நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com