தி.மு.க. - சி.பி.எம். இழுபறி; சி.பி.ஐ.உடன் 4ஆம் கட்டப் பேச்சு!

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
Published on

தி.மு.க. கூட்டணியில் இடதுசாரி கட்சிகள், வி.சி.க.வுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு இழுபறியாக நீடித்துவருகிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- சிபிஎம் பேச்சுக்குழுவினர் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் இன்று மதியம் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றனர். தி.மு.க. குழுவினருடன் அவர்கள் பேசி, கடந்த முறை போட்டியிட்டதைவிடக் கூடுதலான தொகுதிகள் வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினர். 

ஆனால், தி.மு.க. குழுவோ கடந்த முறை சொன்னபடியே, தலைவரைக் கேட்டுவிட்டுச் சொல்கிறோம் என்று கூறிவிட்டது. 

இது இப்படி இழுபறியாக நீடிக்கும் நிலையில், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை எதுவும் இல்லை என சண்முகம் செய்தியாளர்களிடம் கூறினார். ஒருவேளை இன்று இரவுக்குள்கூட அழைப்பு வரலாம் என்றும் அவர் தெரிவித்தார். சற்று முன்னர்வரை அவர்களுக்கு தி.மு.க.விடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. 

இந்நிலையில் சி.பி.ஐ. கட்சியினருடன் நாளை தி.மு.க. குழுவினர் பேசி உடன்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சி.பி.ஐ. தரப்பில் இதை உறுதிப்படுத்த யாரும் முன்வரவில்லை. நான்காவது முறையாகப் பேச்சுவார்த்தை என்பதை மட்டும் அவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com