தமிழ் நாடு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தி.மு.க. சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கடற்கரை ராஜ் வீடு உள்ளது. இவர் இராஜபாளையம் சத்திரப்பட்டியில் பிரச்சாரத்திற்காகச் சென்ற நேரத்தில் மூன்று பேர் கும்பல் வீட்டில் உள்ள 122 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.
சாத்தூர் காவல்நிலையத்தினர் தகவல் அறிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மோப்ப நாய்கள், கைரேகை வல்லுநர்களின் உதவியுடன் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது, மூன்று பேர் வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
அந்தக் காட்சிகளை வைத்துக்கொண்டு காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.