தமிழ் நாடு
நீண்ட காலமாக இந்துத்துவ அரசியலில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டுவந்த புற்றுநோய் மருத்துவ வல்லுநர் மைத்ரேயன் இன்று காலையில் திடீரென தி.மு.க.வில் இணைந்தார்.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
இந்துத்துவ மூல அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பொதுவாழ்வைத் தொடங்கிய மருத்துவர் மைத்ரேயன், பா.ஜ.க.விலும் அ.தி.மு.க.விலுமாக மாறிமாறி அரசியலில் இருந்தார்.
அ.தி.மு.க.வில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
அண்மைக்காலமாக, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரங்களில் பட்டும்படாமலும் இருந்துவந்த அவர், திடீரென தி.மு.க.வில் சேர்ந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.