திருச்சி எம்.எல்.ஏ. ஆட்கள் தாக்கினார்கள்? - இளம்பெண் தற்கொலை

திருச்சி எம்.எல்.ஏ. ஆட்கள் தாக்கினார்கள்? - இளம்பெண் தற்கொலை
Published on

திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கதிரவனின் ஆதரவாளர்கள் தாக்கியதால் இளம்பெண் ஒருவர் தூக்கிலிட்டு மாய்த்துக்கொண்டார் எனப் பிரச்னை எழுந்துள்ளது. 

சில நாள்களுக்கு முன்னர் கதிரவனுக்கு வாக்கு கேட்டு அவருடைய ஆதரவாளர்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பரிசுப் பொருட்களை வழங்கியதாகவும் மாதிரி கூப்பன்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பிச்சாண்டவர் கோவில் ஊராட்சியில் சிந்துஜா என்ற 25 வயது பெண் தனக்கு மட்டும் தரவில்லை எனக் கேட்டதாகவும் அதற்காக அவரை கதிரவனின் ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இதில் அவமானம் அடைந்ததாகக் கருதிய சிந்துஜா ஒரு நாள் கழித்து நேற்று மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

அவருடைய உறவினர்கள் சிந்துஜாவின் மரணத்துக்கான நீதி கிடைக்கவேண்டும், என போராட்டத்தில் ஈடுபட்டனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com