தமிழ் நாடு
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் இன்று சிறப்பு தரிசனம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் ஒரே நாளில் திரண்டதால், வழிபாட்டில் நெரிசல் ஏற்பட்டது. அதிகாலையிலிருந்தே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விடுமுறை நாளும் என்பதால், கடற்கரையிலும் அதிகமான பக்தர்கள் கூடியதால், காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.
சுற்றுலாப் பயணிகளும் கடற்கரையில் கூடியதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது அவர்களுக்கு சவாலாக ஆனது.
இந்நிலையில், கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக, தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கைகால் முறிவும் ஏற்பட்டது.
கோயில் பாதுகாப்புக் குழுவினர் அவர்களை மீட்டு உடனடி முதலுதவி அளித்தனர்.