திருப்பதியில் அமோகம்- 13.52 கோடி லட்டுகள் விற்பனை!

திருப்பதியில் அமோகம்- 13.52 கோடி லட்டுகள் விற்பனை!
Published on

லட்டுக்குப் பெயர்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டுவருகிறது. இந்தப் பிரசாத விற்பனையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் மொத்தம் 12 கோடியே 50 இலட்சம் லட்டுகள் விற்கப்பட்டுள்ளன.  சென்ற ஆண்டில் 13 கோடியே 52 இலட்சம் லட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. 

முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டில் 10 சதவீதம் லட்டுகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஒரு கோடியே 37 இலட்சம் லட்டுகள் அதிகமாக விற்கப்பட்டுள்ளன. 

கோயிலில் வழக்கமாக சுமார் 4 இலட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. சிறப்பு பண்டிகை நாள்களில் 8 முதல் 10 இலட்சம்வரை லட்டுகள் செய்யப்படுகின்றன.  

கடந்த மாதம் 27ஆம்தேதி அன்று பத்து ஆண்டுகளில் இல்லாதபடியாக 5 இலட்சத்து 13 ஆயிரம் லட்டுகள் விற்பனை ஆகின என்பது குறிப்பிடத்தக்கது. 

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com