திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பள்ளிக்குச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் மூன்றாவது நபரே குற்றவாளி என காவல்துறை தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு வாரங்கள் ஆகியும் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளி குறித்து காவல்துறையால் துப்பு துலங்க முடியவில்லை.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றவாளியைக் கைதுசெய்யக்கோரி, கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, சந்தேக நபரின் படங்கள் வெளியிடப்பட்டு, அவரைப் பற்றி துப்பு கொடுப்பவருக்கு பரிசும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இருவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் தொடர்பு இல்லையென விடுவிக்கப்பட்டனர்.
மூன்றாவதாக ஒரு நபரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவரை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியுள்ளார்.
அந்த நபரே குற்றவாளியாக இருக்கக்கூடும் என காவல்துறை முடிவுக்கு வந்துள்ளது.
ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.