துரியோதனன், பஞ்ச பாண்டவர் கூட்டணிகள்- தில்லியில் தினகரன் பேட்டி!

துரியோதனன், பஞ்ச பாண்டவர் கூட்டணிகள்- தில்லியில் தினகரன் பேட்டி!
Published on

தி.மு.க. தலைமையிலான துரியோதன கூட்டணியை வீழ்த்த எங்களது பஞ்ச பாண்டவர் கூட்டணி வலுவாக உள்ளது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

புதுதில்லியில் இன்று மைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார். 

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எப்படி எதிர்கொள்வது? பீகாரில் எப்படி எதிர்கொண்டார்களோ அப்படி எதிர்கொள்வது என்று பேசினோம் என்றார் தினகரன்.

ஒவ்வொரு முறையும் அமித்ஷாவா சென்னைக்கு வந்துபோக முடியும் என அவர் எதிர்க்கேள்வி கேட்டார்.

தில்லிக்கும் தி.மு.க.வுக்கும் இடையில்தான் போட்டி என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதைப் பற்றிக் குறிப்பிட்டவர், தமிழ்நாட்டின் சிஎஸ்கே கிரிக்கெட் குழுவில் தோனிதான் கேப்டன்; அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கான நிதியை நாங்கள் பெற்றுத் தரமாட்டோமோ என முதலமைச்சர் கேட்டுள்ளார்; நாங்கள் தில்லிக்கு வந்தாலே அவர் பயப்படுகிறார்; இது தேர்தல் காலம்; தேர்தலில் வீழ்த்துவதற்கான எங்கள் உத்தியைப் பற்றிப் பேசிவருகிறோம்; தேர்தல் விதிகள் வந்தபின்னர் எப்படி நிதி பற்றி பேசமுடியும் என்றும் தினகரன் கூறினார்.

ஆளும் தி.மு.க. அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் மீண்டும் நினைவூட்டிய அவர், தில்லியைக் கண்டு தவறு செய்தவர்கள் பயப்படுகிறார்கள் என்றார்.

பட்டியல் சாதியினருக்கான நிதியை எடுத்து ஆயிரம் ரூபாய் நிதியை அளித்தது என தி.மு.க. அரசு மீது குற்றஞ்சாட்டினார்.

சசிகலா கட்சியை பா.ஜ.க. கூட்டணிக்குள் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும் அந்தக் கூட்டணியால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com