தூத்துக்குடி எஸ்.பி. திடீர் மாற்றம்!

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை
Published on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் பணி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து சென்னை, சட்டம் ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக சி. மதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது நெல்லை மேற்கு காவல்துறை துணை ஆணையராக இருந்துவருகிறார்.

நெல்லை காவல்துறையின் தலைமையக துணை ஆணையராகப் பணியாற்றிவரும் எஸ். விஜயகுமார், மதனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகர ஆணையர் தலைமையகத் துணை ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்றும் அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் தீரஜ் குமார் ஆணையிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com