தமிழ் நாடு
இரண்டு நாள் பயணமாக மாலத்தீவு நாட்டிலிருந்து பிரதமர் மோடி நேரடியாக இன்று இரவு தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தார். விமானநிலையத்தில் அவரை ஆளுநர் இரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மைய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர்.
ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி விமானநிலையத்தின் புதிய முனையத்தை அவர் திறந்துவைத்தார். பின்னர் அங்குள்ள வசதிகளை பிரதமர் பார்வையிட்டார்.
அமைச்சர் தென்னரசு பிரதமருக்கு வள்ளுவர் கோட்டம் சிற்பத்தை நினைவுப் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார்.