ம.தி.மு.க.வில் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக இரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
” மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு நாசரேத் வே.ரஞ்சன் (முகவரி: எஸ். வேதாவளாகம் 1ஆவது தெரு, வாழையடி, நாசரேத் (அஞ்சல்) - 628 617; தூத்துக்குடி மாவட்டம். செல் : 94430 78560) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
”ஓட்டப்பிடாரம், திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் தெற்கு மாவட்டத்திற்குள் அடங்கும்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக ஆர்.எஸ்.ரமேஷ் தொடர்ந்து பணியாற்றுவார்.
கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வடக்கு மாவட்டத்திற்குள் அடங்கும்.” என்றும் அவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.