தமிழ் நாடு
தெரு நாய் கடித்து பாதிக்கப்பட்ட இளைஞர் இரண்டு மாதங்கள் கழிந்தநிலையில் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் ஒசூர் அருகே இந்தத் துயரம் நேர்ந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் 21 வயதுடைய எட்வின் எனும் அந்த இளைஞர், தெருவில் போய்க்கொண்டிருந்தபோது நாய் கடித்தது. அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நாளாக நாளாக அவருக்கு வெறிநோய்த் தன்மை வரவே, இரு நாள்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மாநிலத்தில் பரவலாக நாய்க்கடி சம்பவங்கள் தொடர்கதையாகி வந்தாலும், அரசுத் தரப்பில் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.