தெருநாய்களைத் தத்தெடுக்க புதிய திட்டம்!

தெருநாய்களைத் தத்தெடுக்க புதிய திட்டம்!
Published on

நாய்கள் உட்படதெருவில் உள்ள விலங்குகளைத் தத்தெடுப்பதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் கமலி இதை அறிவித்தார்.

”தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல பதிவு செய்யப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து விலங்குகளைத் தத்தெடுப்பதற்கான ஒரு டிஜிட்டல் தளத்தை, உருவாக்கும். தெருநாய்களைத் தத்தெடுப்பது ஊக்குவிக்கப்படும். இது பொறுப்புணர்வுடன் கூடிய உரிமையாளர் மனப்பான்மையை வளர்ப்பதுடன், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தெருநாய்களுக்குப் பாதுகாப்பான இல்லங்களையும் வழங்கும்.” என்று அமைச்சர் கூறினார்.

மேலும், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 28 இலட்சம் ரூபாயில் புறக்கடை முயல் வளர்ப்புத் திட்டமும், 70 இலட்சம் ரூபாயில் பன்றி வளர்ப்புப் பண்ணைகள் திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com