அ.தி.மு.க. அலுவலகத்தில் பிரேமலதா
அ.தி.மு.க. அலுவலகத்தில் பிரேமலதா

தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் - பிரேமலதா சூசகம்!

Published on

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் தே.மு.தி.க.வுக்கு மக்களவைத் தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு நேற்று உடன்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், இன்று காலையில் தே.மு.தி.க. தலைமையகத்துக்குச் சென்றனர். அங்குள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் மரியாதை செய்த அவர்கள், அங்கு பிரேமலதா விஜயகாந்த் உட்பட்ட தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, விருதுநகர் தொகுதியில் அவரின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என்று இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றார். 

மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் யாரை நிறுத்துவது என்றும் முடிவுசெய்யப்படவில்லை என்றும் பிரேமலதா கூறினார். 

இதன்மூலம், அ.தி.மு.க. உடன்பாட்டில் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் மறைமுகமாகத் தெரிவித்தார் என்பது தெரிகிறது.   

logo
Andhimazhai
www.andhimazhai.com