தொகுதி மறுவரையறை- மு.க.ஸ்டாலின் பற்றவைத்த தீ!

தொகுதி மறுவரையறை- மு.க.ஸ்டாலின் பற்றவைத்த தீ!
Published on

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்  நாமக்கல்லில் இன்று வாக்கு சேகரித்துவரும் நிலையில், தொகுதி மறுவரையறையைக் கண்டித்து அதற்கான சட்டவரைவின் நகலை எரித்தார். 

முன்னதாக, உள்ளூரில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அவர் கருப்புக் கொடியை ஏற்றினார்.

மதுரையில் பிரச்சாரம் செய்துவரும் துணைமுதலமைச்சர் உதயநிதி, வண்டியூரில் மசோதா நகலை எரித்து முழக்கமிட்டார். மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தார்.

இதனிடையே, தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்க, கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com