தொடர் விடுமுறை- பறக்கும் கட்டணம் பறந்துகொண்டே போகிறது!

air india express flight
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
Published on

கோடை விடுமுறையில் ஏற்கெனவே விமானம், தொடர்வண்டிகளில் நெரிசலாக இருக்கும் நிலையில், விமானக் கட்டணம் எக்கச்சக்கமாக உயர்த்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வார விடுமுறையுடன் நாளை பெரிய வெள்ளி பொது விடுமுறை என்பதால், தலைநகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணங்கள் தாறுமாறாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ரூ.17ஆயிரத்து 21 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவே, மதுரைக்கு 13ஆயிரத்து 147 ரூபாயாகவும்,

கோவைக்கு 16ஆயிரத்து 496 ரூபாயாகவும்,

கேரள மாநிலம் கொச்சிக்கு 18,071 ரூபாயாகவும்,

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 16,496 ரூபாயாகவும்,

தெலுங்கானா ஐதராபாத்துக்கு 19,453 ரூபாயாகவும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்கும் அவதிக்கும் உள்ளாகியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com