தொல்லியல் ஆய்வாளர் நடன. காசிநாதன் காலமானார்!

தொல்லியல் ஆய்வாளர் நடன. காசிநாதன் காலமானார்!
Published on

தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் வயது முப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 85.

அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கல்வெட்டியல், நாணயவியல், செப்பேடுகள், சுவடியியல் எனப் பல்வேறு களங்களில் ஆய்வுசெய்து புதுப்புது செய்திகளை வெளிக்கொண்டுவந்தார்.

அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் அதிக அளவிலான கட்டுரை நூல்களை எழுதியும் வெளியிட்டும் பதிப்பித்தும் உள்ளார்.

கட்டுரை_ஆய்வு_நூல்கள்:

* காலச் சுவடுகள்

* மனோரா

* முத்தரையர்

* தொல்லியல் கட்டுரைகள்

* களப்பிரர்

* கல்வெட்டின் கதை

* இராசராசேச்சுரம்

* கல்லெழுத்துக்கலை

* தமிழகத்தில் தொல்மாந்தர் பண்பாடு

* தமிழர் தெய்வங்கள்

* வன்னியர்

* வரலாற்றுத் தடயம்

* சோழ வேந்தர் பரம்பரை

* பிச்சாவரம் வன்னியப் பாளையக்காரர் வரலாறு

* வன்னியர் மாட்சி

* தமிழக வரலாற்றுச் சின்னங்கள்

* கண்டி மன்னர் கல்லறை

* வளரும் தமிழகத்தில் மலரும் மாவட்டத் தலைநகர் நாகப்பட்டினம்

* தமிழர் காசு இயல்

* பூம்புகாரும், கடல் அகழாய்வும்

* மாமல்லபுரம்

* தமிழகச் சிற்பிகள் வரலாறு

* வன்னியர் வரலாறு, முதல்தொகுதி

* தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்

* தமிழக வரலாற்று வரிசை (களப்பிரர்காலத் தமிழகம்)

* தொன்மைத் தமிழும் தொன்மைத் தமிழரும்

* தென் பகுதிப் பாளையக்காரர்கள் வரலாறு

* தமிழர் பண்பாட்டுச் சிதறல்கள்

* நெல்லை அதன் வரலாற்றெல்லை

* தமிழக வரலாற்றுத் தடயங்கள்

* சோழர் செப்பேடுகள்

* கல்வெட்டியல் (இணை ஆசிரியர்)

* கல்வெட்டு ஓர் அறிமுகம் (இணை ஆசிரியர்)

* ஆய்வுக் கொத்து (இணை ஆசிரியர்)

* பூம்புகார் (இணை ஆசிரியர்)

* ஆய்வுத்தேன் (இணை ஆசிரியர்)

* கும்பகோணமும் மகாமகப் பெருவிழாவும் (இணை ஆசிரியர்)

* தொல்லியல் துறையின் அரிய கண்டுபிடிப்புகள் (இணை ஆசிரியர்)

* தடயம் (இணை ஆசிரியர்)

* தொன்மைத் தடயம் (இணை ஆசிரியர்)

* பண்டைத் தடயம் (இணை ஆசிரியர்)

* சமணத் தடயங்கள் (இணை ஆசிரியர்)

* பெரம்பலூர் மாவட்டத் தடயங்கள் (இணை ஆசிரியர்)

* காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள் (இணை ஆசிரியர்)

* தமிழ் எழுத்தியல் வரலாறு (இணை ஆசிரியர்)

* காஞ்சிபுரம் மாவட்டக் கலைகள், தொகுதி - 1 (இணை ஆசிரியர்)

* வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 1 (இணை ஆசிரியர்)

* வேலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 2 (இணை ஆசிரியர்)

* கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 1 (இணை ஆசிரியர்)

* கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி - 2 (இணை ஆசிரியர்)

பதிப்பித்த_நூல்கள்:

* அருண்மொழி

* தமிழர் நாகரிகம்

* கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (முதல்தொகுதி)

* கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (இரண்டாம்தொகுதி)

* கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் (மூன்றாம் தொகுதி)

* தொல்லியல் கருத்தரங்கம், பகுதி – 11, பொதுப் பதிப்பாசிரியர்

* திருக்கோடிகா கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர்

* தமிழ்க் கீர்த்தனைகள், பொதுப் பதிப்பாசிரியர்

* திருக்குறள் பழைய உரை, பொதுப் பதிப்பாசிரியர்

* வன்னியர் வரலாறு, இரண்டாம்தொகுதி, பகுதி - 1, பதிப்பாசிரியர்

* வன்னியர் வரலாறு, இரண்டாம்தொகுதி, பகுதி - 2, பதிப்பாசிரியர்

* திருவீழிமிழலைக் கல்வெட்டுகள், பொதுப் பதிப்பாசிரியர்

* அரசு கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலக வெளியீடுகள் (மொத்தம் - 51 ) பொதுப் பதிப்பாசிரியர்

* பெருமுக்கல் கல்வெட்டுகள், இணைத் தொகுப்பாளர்

ஆங்கில_நூல்கள்:

* Hero Stones in Tamil Nadu

* Functions of the Department of Archaeology

* Under Sea Exploration off the shore of Pumpuhar

* The Metropolis of the Medieval Cholas

* Seminar on Marine Archaeology

* Art panorama of the Tamils

* Padavedu Excavation

* Alagankulam – A Preliminary Report of Excavation

* Collected papers (Studies in Tamil Culture) Author

* Achievements of Archaeology Department

* Ancient Industries of Tamil Nadu

* Cultural Heritage of Tamil Nadu

* Ancient Ports of Tamil Nadu and their trade contact with Foreign Countries

* Tirukkoyilur Excavation

* The Metropolis of the Medieval Cholas

* Tamils Heritage

* Ancient Port Towns and their busy Trade Activities, Capital Cities and Trade Contact

* Hero-Stones, Pallava Period

* Cultural Heritage of the Tamils

logo
Andhimazhai
www.andhimazhai.com