நடிகர் ரோபோ சங்கர் மறைவு!

பாட்னர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ரோபோ ஷங்கர்
பாட்னர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ரோபோ ஷங்கர்
Published on

திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் இன்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. 

பல மாதங்களுக்கு முன்னர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிர் மீண்டுவந்ததைப் போல நன்றாகத் தேறி வந்தார். மருத்துவர் அறிவுரைக்குப் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் படங்களில் நடிக்கவும் தொடங்கினார். 

சில நாள்களுக்கு முன்னர்கூட பட விழாவில் பங்கேற்றுப் பேசினார். 

புதிய படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்தவருக்கு, உடல் நலிவு ஏற்பட்டது. சென்னையை அடுத்த பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, செயற்கைச் சுவாச நிலைக்குச் சென்றார். 

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று இரவு 8.30 மணியளவில் ரோபோ சங்கர் காலமானார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com