நயினார் மீது நடவடிக்கை என்ன?- கனிமொழி சுளீர் கேள்வி

கனிமொழி எம்.பி.
கனிமொழி எம்.பி.
Published on: 

விஜய் ஆட்சி வந்தபிறகுதான் தமிழகத்தில் பெண்கள் மீதான கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன என்று நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். 

சென்னையில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல கேள்விகளை எழுப்பினார். 

”நா.த.க. நிர்வாகி கார்த்திகாவை அவதூறாகப் பேசியதாக இரவு உடையில் கைதுசெய்துள்ளனர்; சென்னை மேயர் பிரியா உட்பட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண்களைப் பற்றி அவதூறாக சமூக ஊடகங்களில் குறிப்பிடுகின்றனர். பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் அவர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பெண் அமைச்சர் அவதூறாகப் பேசியதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அண்ணனாக இருக்கிறேன் என விஜய் சொல்வதெல்லாம் வேண்டாம்; உங்கள் கடமையைச் செய்யுங்கள்.”  என்று கனிமொழி கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com