rnallakkannu100
இரா.நல்லகண்ணு100

நல்லகண்ணு 100- பழ. நெடுமாறன் முக்கிய வேண்டுகோள்!

Published on

சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவருமான இரா. நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் விழாக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தியாகத் தலைவர் இரா. நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழா 29.12.2024 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். நேர நெருக்கடியின் விளைவாகவும், ஐயா நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை கருதியும் அவருக்குப் பூ மாலைகள், பொன்னாடைகள் ஆகியவற்றை அணிவிப்பதைத் தவிர்க்குமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறேன்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“விழாவின் தொடக்கத்தில் ஐயா அவர்களை மண்டபத்திற்குள் அழைத்து வரும்போது அங்குக் கூடியிருப்பவர்கள் மலர்களைத் தூவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கெடுத்துக்கொண்டு மலர்களைத் தூவி ஐயாவை வாழ்த்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.” என்றும் நெடுமாறன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com