நாஞ்சில் சம்பத்துக்குப் பரப்புரைச் செயலாளர் பதவி!

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்
Published on

தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துள்ள நாஞ்சில் சம்பத்துக்கு அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

த.வெ.க. தலைவர் விஜய் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதன் விவரம்:

“ தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். சிறந்த பேச்சாளர். அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர், அண்ணன் நாஞ்சில் சம்பத், தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணன் நாஞ்சில் சம்பத், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary)பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர். பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார்.

கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி. மக்கள் பணியாற்றிட வேண்டும்.” என்று விஜய் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com