நான் அடிமை என்றால், கருணாநிதி என்ன?- உதயநிதிக்கு எடப்பாடி கேள்வி

நான் அடிமை என்றால், கருணாநிதி என்ன?- உதயநிதிக்கு எடப்பாடி கேள்வி
Published on

பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசினார். அப்போது, உதயநிதியின் பேச்சுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.

கூட்டத்தில் அவர் பேசியது:

“என்னைப் பார்த்து, பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை என்று Udhayanidhi Stalin சொல்கிறார் என்றால், அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று சொல்வார்? என்ன பட்டம் கொடுப்பார்?

தன் தாத்தா கருணாநிதியை நேரடியாக விமர்சிக்க முடியாமல், என் பெயரைக் குறிப்பிட்டு தன் தாத்தாவைப் பற்றி பேசுகிறாரா?

ஆக, அரசியல் கத்துக்குட்டி உதயநிதி ஸ்டாலின் தெரிந்து பேச வேண்டும்.

இன்று உலகின் பணக்காரக் குடும்பங்களுள் ஒன்றாக ஸ்டாலின் குடும்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பத்தின் ஆட்சி தேவையா?

குடும்ப ஆட்சியை, வாரிசு அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் வீழ்த்திடப் போகும் தேர்தல் தான் வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்.” என்று பழனிசாமி பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com