நான் சங்கரமடத்தில் சேர்ந்துகொள்ளவா?- நொந்துபோய் கேட்ட ஓ.பன்னீர்!

நான் சங்கரமடத்தில் சேர்ந்துகொள்ளவா?- நொந்துபோய் கேட்ட ஓ.பன்னீர்!
Published on

அ.தி.மு.க.வில் பலவாறு முயற்சிகள் செய்தும் எடப்பாடி பழனிசாமி தன்னைக் கட்சியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்று வெதும்பிப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இதற்காக நான் சங்கரமடத்தில் போய் சேர்ந்துகொள்ளவா எனக் கேட்டார். 

அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

பின்னர் விரிவாக செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவிடம் கட்சி ஒற்றுமைக்காக தான் பேசியதாகவும் அவரும் அதற்கு முயன்றதாகவும் ஆனால் கடைசிவரை எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் பன்னீர் கூறினார்.

தன்னுடைய மகன்கள் மூலமாகப் பேசியதால்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாகவும் அவர் சொன்னார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com