அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

நாளை மதியத்தில் தி.மு.க. மாவட்டச்செயலாளர் கூட்டம்!

தி.மு.க. மாவட்டச்செயலாளர் கூட்டம் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. 

காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். 

தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில், அதுகுறித்தும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைமை உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com