நாளை முதல் வேலைக்குத் திரும்ப அரசு மருத்துவர்கள் முடிவு!

ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனை
ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனை
Published on

சென்னையில் அரசு மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் பணிப் பாதுகாப்பு கோரியும் காலவரையில்லாத வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது. இன்று காலைமுதல் மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட, வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் இன்று பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

நேற்று மாலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேலைநிறுத்தம் வாபஸ் என அமைச்சர் கூறினார். ஆனால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் தொடரும் என மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறது. 

இந்நிலையில், இன்று மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனைச் சந்தித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில், நோயாளிகளின் நலன் கருதி வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதாகவும் நாளைக்குப் பணிக்குத் திரும்புவதாகவும் தெரிவித்தார். 

மருத்துவர்களின் கோரிக்கைகள் வரும் 29ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியனும் கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com