தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
”சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாட்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.” எனக் குறிப்பிட்டுள்ள அவர், அரசின் ஆறு முடிவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
”இவை அனைத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறுதல் தரும் வரவேற்கத்தக்க அறிவிப்புகள் ஆகும். எனவே மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இதனை ஏற்று பணிக்கு திரும்ப வேண்டும்.” என்றும்,
”தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களை தொய்வு இன்றி செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.