
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் தொடர்பாக கீழைக்காற்று பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறது. இதை வரும் சென்னைப் புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைக்கப்போவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
உடனே கொதித்தெழுந்த சுவாமிநாதன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அந்தப் புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டும்; புத்தகக் காட்சியில் விற்க அனுமதிக்கக் கூடாது என்று பரபரப்பைக் கிளப்பினர்.
புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்புக்கும் முறையீடு அனுப்பினர்.
அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பதிப்பகமே தாங்கள் இந்தப் புத்தகத்தை விற்பனையில் வைப்பதில்லை எனத் தீர்மானித்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
அதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, புத்தகத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அவற்றைப் பறிமுதல் செய்யவும் அவ்வுத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து 3 வாரங்களில் விளக்கம் அளிக்குமாறு பதிப்பகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.