Government Hospital
அரசு மருத்துவமனை

’நோயாளி’ பெயரை மாத்துங்க முதலமைச்சரே!

Published on

தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்துவரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழக்கமான வேலைகளிலும் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில், ’முதலமைச்சர் அவர்களது
மேலான சிந்தனைக்கு’ என அவர் ஒரு பகிரங்கக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

” மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ (Patients) என்று தற்போது புழங்கி வரும் சொல்லுக்கு மாற்றாக,

‘மருத்துவப் பயனாளிகள்’ (MEDICAL BENEFICIARIES) என்ற சொல்லைப் பயன்படுத்தினால், அவர்களிடம் (நோயாளிகளிடம்) உள்ள நம்பிக்கைக் குறைவு சற்று மாற வாய்ப்புண்டு.

கருணாநிதியின் ஆட்சியில், ‘மாற்றுத் திறனாளிகளாக’ மாற்றி (‘உடல் ஊனமுற்றோர்’ என்பதைத் தவிர்த்து) ஒரு தன்னம்பிக்கையை ஊட்டியதுபோல, தங்களது ‘திராவிட மாடல்’ ஆட்சியில், இது தங்களுக்கு ஏற்கத்தக்கதாக இருந்தால், ஆணை பிறப்பிக்கலாம்.” என்று வேண்டுகோளாகவும் கோரிக்கையாவும் 
கி.வீரமணி வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com