பரிதாபங்கள் யூட்டியூப் சேனல் மீது ஆந்திர டி.ஜி.பிக்கு பா.ஜ.க. புகார் மனு
திருப்பதி இலட்டு சர்ச்சை தொடர்பாக காணொலி ஒன்றை பரிதாபங்கள் யூட்டியூப் சேனலில் வெளியிட்டனர். ஆனால், அதற்கு ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் பெரிதாகும் அளவுக்கு இருந்ததால், பரிதாபங்கள் குழுவினர் அந்தக் காணொலியையே நீக்கிவிட்டனர்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவின் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, ஆந்திரப்பிரதேச டி.ஜி.பி. துவாரக திருமலா ராவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அவர்கள் வெளியிட்ட காணொலியால் இலட்சக்கணக்கான இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டதாகவும் எனவே அவர்கள் மீது இரு மதப் பிரிவினருக்கு இடையே பகைமையை ஏற்படுத்துதலுக்காக புதிய பாரத குற்றவியல் சட்டத்தின் 196, 299 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமர் பிரசாத் தன்னுடைய புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
