தமிழ் நாடு
சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசாரணை நடத்துகிறது.
இன்றைய காலையில் நடைபெற்ற விசாரணையின்போது, காவல்துறை ஆணையரின் செயல்பாட்டுக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
அரசுக்கு சரமாரியாக கேள்விகளையும் விடுத்தனர்.
அதையடுத்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
அதன்படி, சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகிய மூன்று இந்தியக் காவல் பணி அதிகாரிகள் குழுவை அரசு அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.