பா.ஜ.க.வும் தி.மு.க.வும் சேர்ந்து செயல்பட்டன- நிர்மல்குமார்

பா.ஜ.க.வும் தி.மு.க.வும் சேர்ந்து செயல்பட்டன- நிர்மல்குமார்
Published on

தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வும் தி.மு.க.வும் சேர்ந்து செயல்பட்டதாக த.வெ.க. நிர்வாகி நிர்மல்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைக் கூறினார். 

”தேர்தலை முன்னிட்டு உளவுத்துறை அதிகாரி செந்தில்வேலன் உட்பட பலரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்; அவர்களை மாற்ற வேண்டும் என முன்னரே கூறினோம்; ஆனால் தேர்தலுக்கு ஐந்து நாள்களுக்கு முன்னர்தான் அவர்களை மாற்றினார்கள்; பா.ஜ.க.வுக்குத் தெரியாதா எந்தெந்த அதிகாரி எப்படி என்று... அவர்கள் இருவரும் சேர்ந்து செயல்பட்டதால் இப்படி... சென்னை, மதுரை உட்பட பல இடங்களில் எங்கள் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி புகார் அளிக்கவுள்ளோம்.” என்றும் அவர் கூறினார்.    

logo
Andhimazhai
www.andhimazhai.com