தமிழ் நாடு
பா.ம.க.வின் செயல்தலைவராக தன் மகள் காந்திமதியை நியமித்து அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு அறிவித்துள்ளார்.
தருமபுரியில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக, கட்சியின் தலைவர் அன்புமணியை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு செயல்தலைவர் எனும் பதவியில் நியமித்தார்.
அதை அன்புமணி ஏற்றுக்கொள்ளாத நிலையில், இருவரும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படியொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இராமதாசின் அறிவிப்பின்போது காந்திமதியும் மேடையில் இருந்தார்.