பாம்பன் பாலம்- கப்பல்கள் குறித்து டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வி!

பாம்பன் பாலம்- கப்பல்கள் குறித்து டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வி!
Published on

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெகல்பூர் விவகாரம் தொடர்பாக விவாதத்துக்கு வலியுறுத்தினர். அமளி தொடர்ந்ததால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர், வளாகத்தில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மக்களவையில் தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் பலரும் இன்று தங்கள் கேள்விகளை எழுப்பினர்.

இதில், திருப்பெரும்புதூர் தொகுதி உறுப்பினர் டி.ஆர். பாலு வைத்த கோரிக்கை அனைவரையும் ஈர்த்தது.

”பாம்பனில் கடலில் ஒரு புதிய லிப்ட் பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில்கள் மற்றும் கூடுதல் சேவைகளை இயக்க வேண்டும்.” என டி. ஆர். பாலு வலியுறுத்தினார்.

அதேசமயம், தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக புதிய பாம்பன் நெட்டுத்தூக்கு பாலம் பல நாள்களாக செயல்படாமல் உள்ளது என்பதைக் குறிப்பிட்டு, அதை விரைவில் சரிசெய்யவும், அதன்கீழ் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக எப்போது மீண்டும் செயல்படும்? அதற்கான காலக்கெடுவின் விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com