தமிழ் நாடு
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதையொட்டி இராமேசுவரம், பாம்பன் கடற்பகுதியில் அசாதாரணமான வானிலை உருவாகியுள்ளது.
ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.