பிரதமர் முன்னால் நயினாரின் டைமிங் பேச்சு!

பிரதமர் முன்னால் நயினாரின் டைமிங் பேச்சு!
Published on

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் பிரச்சாரக் கூட்டம் இப்போது நடைபெற்று வருகிறது. 

இதில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை வரவேற்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். 

அப்போது, அவர் ஆங்காங்கே டைமிங் ரைமிங் என்பதைப் போல சில வாசகங்களைக் குறிப்பிட்டது கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. 

”இங்கே கூட்டம், சென்னை சட்டமன்றத்தில் பதற்றம்.”, “ இங்கே கூடியிருக்கும் கூட்டம் அவர்களின் ஆட்டத்தை முடிக்கக்கூடிய கூட்டம்..”, ”வானமே இங்கே வாழ்த்திக்கொண்டிருக்கிறது. மோடி அவர்கள் இங்கே வந்தார். உதயசூரியனைக் காணோம்..” என்பன உட்பட பல வாசகங்கள் அவரின் உரையில் இடம்பெற்றிருந்தன.  

logo
Andhimazhai
www.andhimazhai.com