பொறுப்பேற்ற புது டி.ஜி.பி. மகேஷ்குமார்- சிறைத் துறைக்கு ரத்தோர்!

டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
Published on

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் இன்று காலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இதுவரை அந்தப் பதவியில் இருந்துவந்த சந்தீப் ராய் ரத்தோர், சிறைத்துறை டி.ஜி.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவி கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்திலிருந்து டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்துவரும் கே.சங்கர், குற்றப்புலனாய்வுத் துறையின் அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com