தமிழ் நாடு
ஓராண்டுக்கு முன்னர் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி எனும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
ஆர்ம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு நாள் திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. வி.சி.க. தலைவர் திருமாவளவன், த.வா.க. தலைவர் வேல்முருகன் உட்பட்ட தலைவர்கள் நேரில் சென்று மலர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கு, புதிய கட்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கட்சியின் கொடியையும் பொற்கொடி வெளியிட்டார். தற்போதைய பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படமும் உள்ளபடி அந்தக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் டிஎம்பிஎஸ்பி (TMBSP) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.