தமிழ் நாடு

ஊழலை ஒழிப்பதற்காகப் பாடுபடும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசாங்கத்தில் அரசு வழக்குரைஞர் பணிக்காக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முதலிய பலரும் கையூட்டு பெறுகிறார்கள் என அதே கட்சியைச் சேர்ந்த ஞானசௌந்தரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வழக்குரைஞர் நியமனத்தில் இப்படி பிரச்னை இருப்பதாக அவர் தன் மனுவில் கூறியிருந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக த.வெ.க. தரப்பில் அதன் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.