பெருமாள் முருகன், மாரி செல்வராஜுக்கு தி.க. பெரியார் விருது!

பெருமாள் முருகன், மாரி செல்வராஜுக்கு தி.க. பெரியார் விருது!
Published on

எழுத்தாளர் பெருமாள் முருகன், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு இந்த ஆண்டின் தி.க. பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தி.க.சார்பு அமைப்பான தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 32 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் கலை, இலக்கியம், அறிவியல், சமூகப்பணி, விளையாட்டு, சூழலியல், தொழில், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு பெரியார் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இருவருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

”சமூக நீதிச் சிந்தனையுடன் செயல்பட்டு தமது படைப்புகளால் பல்வேறு சமூக அவலங்களை வெளிப்படுத்தி வரும் எழுத்தாளர் பெருமாள்முருகன், தமது திரைப்படங்களால் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்து முற்போக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சாதனைகள் படைத்து வரும் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு வழங்கப்படவிருக்கிறது.

இந்த விருது சென்னை பெரியார் திடலில் வரும் 17 ஆம் தேதி மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள திராவிடர் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியால் வழங்கப்பட உள்ளது.” என்று மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கலி.பூங்குன்றன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com