பெரும்பான்மை ஆதரவு- விஜய் அரசாங்கம் வெற்றி!

பெரும்பான்மை ஆதரவு- விஜய் அரசாங்கம் வெற்றி!
Published on

சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசாங்கம் நம்பிக்கை வாக்கு கோரியது. 

அவை கூடியதும் விஜய் அரசுக்கான ஆதரவைக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். 

கட்சித் தலைவர்களின் பேச்சுக்கு அடுத்து, தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 

தி.மு.க. வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. 

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே கட்சியில் வேலுமணி தலைமையில் 25 பேர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 

பா.ம.க.வும் பா.ஜ.க.வும் நடுநிலைமை வகித்தன.

நிறைவில், 144 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com