பொன்னான நேரத்தை வீணடித்த அமைச்சர்- பா.ஜ.க. நாகராஜ் குற்றச்சாட்டு

பா.ஜ.க. ஜி.கே.நாகராஜ்
பா.ஜ.க. ஜி.கே.நாகராஜ்
Published on

சட்டப்பேரவையின் பொன்னான 2 மணி நேரம் 35 நிமிடத்தை வீணடித்த அமைச்சர் வினோத்தின் விவசாய பட்ஜெட் என்று தமிழக பா.ஜ.க. விவசாயிகள் அணியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியிருக்கிறார்.

”தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எதையும் உட்படுத்தாமல் 80% மத்திய அரசின் திட்டங்களுக்கு வெற்றி என்ற பெயர் சேர்த்து வேளாண் பட்ஜெட்டை அறிவித்திருக்கிறார் அமைச்சர்.தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி நெல் மற்றும் கரும்புக்கு ஆதாரவிலை குறித்து எந்த அறிவிப்புமில்லை.

நீராதாரத்தை மேம்படுத்த தீவிரமான திட்டங்களில்லை. விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் பால்கொள்முதல் விலை உயர்வு குறித்து பேசப்படவில்லை. அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே விவசாயிகளுக்குச் சென்றுசேர்வதை பொறுத்தே பட்ஜெட்டின் பலன்கள் தெரியவரும்.

மொத்தத்தில் 1கோடி  2கோடி,5கோடி என சிறிய தொகையின் பல அறிவிப்புகளை வெளியிட்டு சட்டசபை நேரத்தை வீணடித்திற்குகிறார் விவசாயத்துறை அமைச்சர். விவசாயம் குறித்து அறியாதவர்கள் களத்தை ஆய்வுசெய்யாமல், அறிவிக்கப்பட்ட வெற்று பட்ஜெட்.               

விவசாய அமைச்சர் உரையின் முடிவில் உரத்த குரலில் முதல்வரைப் புகழ்ந்த வேகத்தை நிதிநிலை அறிக்கையில் காட்டத் தவறிவிட்டார்.” என்று நாகராஜ் கூறியிருக்கிறார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com