போராட்டத்தில் இருந்த ஆசிரியர் தற்கொலை!

தற்கொலை
தற்கொலை
Published on

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் 13ஆவது நாளாகப் போராடிவந்தனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து தலைநகருக்கு வந்து தங்கி மீண்டும் மீண்டும் போராட்டத்தை நடத்திவந்தனர். 

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நேற்று சகஆசிரியர்களுடன் போராடி கைதாகி, வானகரம் தனியார் மண்டபத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் மன உளைச்சலில் விசம் அருந்தினார். 

உடனே அருகில் இருந்தவர்கள் அவசர ஊர்தி சேவைக்குத் தெரிவித்தனர். அவர் கீழ்பாக்கம், அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பலனின்றி அவர் உயிரிழந்தார். 

அவரது மரணம் போராடிவரும் ஆசிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com