போலி நூல்களைத் தெருவில் போட்டு எரிக்கவேண்டும்- கமல்

பெரியார் அறிவுலகம், கோவை
பெரியார் அறிவுலகம், கோவை
Published on: 

கோவை பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதல் முறைகேட்டைப் பற்றி ம.நீ.ம. தலைவர் கமல், தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

”இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.” என்றும் அவர் சாடியுள்ளார். 

”இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.” என்று கமல் ஹாசன் தன் சமூக ஊடகப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.