அறிவாலயத்தில் கமலை வரவேற்கும் உதயநிதி ஸ்டாலின்
அறிவாலயத்தில் கமலை வரவேற்கும் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் நீதி மையத்துக்கு இப்போது சீட் இல்லை; மாநிலங்களவையில் 1 இடம்- உடன்பாடு!

தி.மு.க. அணியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சிக்கு இந்த மக்களவைத் தொகுதியில் இடம் ஒதுக்கப்படவில்லை; 2025ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன்னர் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன்படி, வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடாது; தி.மு.க. கூட்டணிக்காக தமிழ்நாடு, புதுவையில் மக்கள் நீதி மையம் பிரச்சாரம் மேற்கொள்ளும்.

முன்னதாக, உடன்பாட்டுக்காக அறிவாலயம் வந்த கமலை, தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதியும் சேர்ந்து வரவேற்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கமல், “ நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. இது பதவிக்கான விசயம் அல்ல; நாட்டிற்கானது. யாருடன் கூட்டணி சேரவேண்டுமோ அவர்களுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறேன்.” என்று கூறினார்.   

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com