மண்டபத்தில் ஸ்டாலின், வீட்டில் உதயநிதி... வைகோ பேத்திக்கு திருமண வாழ்த்து!

MKStalin wishes at Vaiko's grand daughter's marriage
வைகோ பேத்தி திருமணத்தில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ எம்.பி.யின் மகள் ரேணுகா- கோகுலகிருஷ்ணன் ஆகியோரின் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

திருவேற்காட்டில் தனியார் அரங்கில் நேற்று காலையில் நடைபெற்ற திருமணத்துக்கு தங்கை கனிமொழியுடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தினார். முன்னரங்கில் வந்து அவரை வரவேற்ற வைகோ, மேடைவரை கூட்டிச்சென்று தம் குடும்பத்தினர் பலரையும் அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஸ்டாலின் அங்கிருந்து புறப்படும்வரை வைகோ மிகுந்த பரவசத்துடன் காணப்பட்டார். 

MKStalin wishes for Vaiko's grand daughter's marriage
வைகோ பேத்திக்கு உதயநிதி திருமண வாழ்த்து

திருமணம் முடிந்து தம்பதியர் சென்னை, அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்துக்குச் சென்றனர். நேற்று மாலையில் துணைமுதலமைச்சர் உதயநிதியும் அமைச்சர் அன்பில் மகேசும் வைகோவின் வீட்டுக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com