தமிழ் நாடு
தலைநகர் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் போத்தீஸ் துணிக்கடை மிகவும் புகழ்பெற்று விளங்கிவருகிறது. பரபரப்பான இந்தக் கடை விற்பனையில் இன்று அதிரடியாகப் புகுந்த வருமான வரித் துறையினர் காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள போத்தீஸ் கடையில் வருமான வரித் துறையைச் சேர்ந்த 12 பேர் காலை 10 மணி முதல் தேடுதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் உள்ள இந்தக் கடையின் ஜிஎஸ்டி கணக்கு குளறுபடி உள்ளதாகவும் வரி ஏய்ப்புக்கான வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச் சோதனை காரணமாக கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறியாமல் போத்தீஸ் கடைக்கு வருகைதந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.