
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரைச் சூட்ட அரசு தீர்மானித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பதிவில் இதைத் தெரிவித்துள்ளார்.
அவரின் சமூக ஊடகப் பதிவு:
“ நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது #DravidianModel-இல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்”!
தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான #NetajiSubashChandraBose அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.
ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.” என்று முதலமைச்சர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.