மதுரை மெட்ரோ ஏன் கைவிடப்பட்டது?- நயினார் நாகேந்திரன் விளக்கம்

மதுரை மெட்ரோ ஏன் கைவிடப்பட்டது?- நயினார் நாகேந்திரன் விளக்கம்
Published on

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் பெரிதான நிலையில், மதுரை மக்களுக்குத் தேவை வளர்ச்சி அரசியல்தான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து கூறியிருந்தார். 

அதைப் பற்றி பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் விளக்கம் அளித்தார். 

”மெட்ரோ திட்டம் வரும்போது 2021ஆம் ஆண்டு பட்ஜெட் மானியக் கோரிக்கையில் தி.மு.க. அரசு சேர்க்கவில்லை. ” என்று குறைகூறினார். 

ஆனால் மைய அரசு விரிவான திட்ட அறிக்கை கேட்டதாகவும் தமிழக அரசு கொடுத்த அறிக்கையில், இப்போதைய பேருந்துப் பயணத்துக்கும் மெட்ரோவுக்கும் இரண்டுமூன்று நிமிடங்கள்தான் வித்தியாசம் என்றும் இரயில்நிலையங்கள் கட்ட 10 மீட்டர் என மிகக் குறைவான இடம்தான் தரமுடியும் என்றும் கூறியிருப்பதாகவும், நயினார் காரணம் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com